தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
90களில் பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கவுசிக் தீவிரமான விஜய் ரசிகர். சமீபத்தில் ரோஜா, ஆர்கே செல்வமணி, கவுசிக் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் விஜய் மீதான ஈர்ப்பு எத்தகையது என கேட்டதற்கு அவர் கூறிய பதில் விஜய் ரசிகர்களையே திகைக்க வைப்பதாக இருக்கிறது.
ஆம்.. விஜய்யின் ஒவ்வொரு பட டிரைலரையும் கிட்டத்தட்ட பல்லாயிரம் முறை பார்த்து விடுவாராம் கவுசிக். இவற்றை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட நூறு ஜிமெயில் கணக்குகளை துவங்கி வைத்திருக்கிறாராம். அத்தனை கணக்குகள் மூலமாகவும் அந்த டிரைலரை பார்த்து லைக் செய்வது, கமெண்ட் போடுவது என தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறாராம் கவுசிக். தங்கள் மகன் விஜய் ரசிகர் என்பதில் பெற்றோருக்கும் மிகவும் பெருமையே என்பதையும் அந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.