'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சிலஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணம் எப்போது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத செய்தியாகவே இருந்து வருகிறது. ஆனாலும் இந்தாண்டிற்குள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் தங்களது காதல் உருவானதால் அந்த ஞாபகார்த்தமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற ஒரு பட நிறுவனத்தை தொடங்கி தரமான படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துல ரெண்டு காதல் என்ற படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தநிலையில், தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புதிதாக ஒரு இன்னோவா கார் வாங்கியுள்ளனர். நேற்று அந்த காருக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பூஜை செய்திருக்கிறார்கள். பூசாரிகள் காருடன் சேர்த்து இருவருக்கும் திருஷ்டி சுற்றி போட்டனர்.