மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நடுநிசி நாய்கள், வெப்பம், நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே, யான் உள்ளபட பல படங்களை தயாரித்து உள்ளார். அமலாபால், அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கினார். எல்ரெட் குமார் சினிமா தயாரிப்புடன் கல்குவாரி உள்ளிட்ட வேறுபல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இவர் மீது வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து எல்ரெட் குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வுக்கு பிறகுதான் அவர் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தெரியவரும், என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.