210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் |
துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு, இசைஞானி இளையராஜா சென்றிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் இதுவரை 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்நிலையில் துபாயில் தற்போது நடந்து வரும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி நேற்று முன்தினம் (மார்ச் 5) கோலகலமாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. துபாய் எக்ஸ்போ ஷோவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இசை கச்சேரி நடைபெற்றது. இந்நிலையில், துபாய் சென்றிருக்கும் இளையராஜா, அங்கிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்றார்.
இளையராஜாவை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றி காண்பித்தார். அவருடன் எடுத்த போட்டோவை, தனது சமூக வலைதள பக்கத்தில், 'மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்' என்ற பதிவுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.