நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ். மனோகரம் என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில் புதிய தமிழ் படம் ஒன்றில் ஹீரோயின் ஆனார்.
ஒலிம்பிக்ஸ் மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் கவின் ஜோடியாக நடிக்கிறார். ராஜேஷ். எம் உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார். கவின் மற்றும் அபர்ணா தாசுடன், 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், 'வாழ்' புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கணேஷ் பாபு கூறியதாவது: 2கே கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக உருவாகிறது. இந்த படம் இளைஞர்களை மட்டுமல்ல, உலகளாவிய ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முழுத்திரைப்படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தலைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.என்றார்.