ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த ஜனவரியிலேயே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூழலில் அப்போதே மும்பை, சென்னை, ஐதராபாத், கேரளா என பல இடங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இருந்தாலும் தற்போது படம் வெளியாக உள்ள சூழலில் மீண்டும் முக்கியமான நகரங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். அப்போது இயக்குனர் ராஜமவுலியிடம் உக்ரைனில் நடந்துவரும் போர் குறித்து மீடியாக்கள் கேட்டன.
அதற்கு பதில் அளித்த ராஜமவுலி, “இந்தப்படத்தின் சில முக்கிய காட்சிகளை உக்ரைனில் தான் படமாக்கினோம். அந்த சமயத்தில் அவ்வளவு அழகாக, படப்பிடிப்பு நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட நாடாக உக்ரைன் இருந்தது. நாங்கள் படப்பிடிப்பை நடத்தியபோது உக்ரைனை சேர்ந்த தொழில்நுட்பக் குழுவினர் சிலர் எங்கள் படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு அவர்களது பாதுகாப்பு, உடல்நலம் பற்றி விசாரித்து வருகிறோம். பெரும்பாலும் அனைவருமே பாதுகாப்புடன் இருப்பதாக கூறினாலும் தொடர்ந்து நடந்துவரும் போர் கவலை அளிப்பதாக இருக்கிறது.”. என்று கூறியுள்ளார் ராஜமவுலி.