மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
திரைப்பட நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள சில பல சினிமா ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதிலும் முன்னணி ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருந்தால் ஏதோ தாங்களே அந்த அளவுக்கு சம்பாதிப்பது போல சில ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே அஜித் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல்கள் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன. போனி கபூருக்கு தொடர்ந்து மூன்று படங்கள் நடித்துக் கொடுப்பதை விரைவில் ஆரம்பமாக உள்ள தனது 61வது படத்துடன் முடிக்க உள்ளார் அஜித். அதற்கடுத்து தனது 62வது படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார்.
இந்த 62வது படத்திற்காக அஜித் 100 கோடி சம்பளம் வாங்குகிறார் என செய்திகளை பரப்பி வருகிறார்கள். அஜித்தின் 62வது படத்தை சத்யஜோதி நிறுவனம் தான் தயாரிக்க இருந்ததாகவும், அவர்கள் அஜித்திற்கு 80 கோடி தரத் தயாராக இருந்ததாகவும், ஆனால், அஜித் 100 கோடி கேட்டதால் பேச்சு வார்த்தை நின்றதாகவும் ஒரு தகவல். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட நயன்தாரா உடனடியாக லைக்கா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அஜித்திற்கு 100 கோடி சம்பளம் தந்தால் உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று கேட்டாராம். அவர்களும் அஜித்திற்கு எத்தனை கோடி வேண்டுமனாலும் தரத் தயாராக இருக்கிறோம் என உடனே பேசி முடித்து அறிவித்துவிட்டதாகவும் மற்றொரு தகவல்.
'பீஸ்ட்' படத்திற்கு விஜய்க்கு 100 கோடி சம்பளம், அதனால் புதிய படத்தில் நடிக்க அஜித் 100 கோடி சம்பளம் கேட்டால் என இன்னொரு தகவல். இப்படி பலரும் பல கதைகளைக் கூறி வருகிறார்கள். அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'வலிமை' எத்தனை கோடி வசூல் என பேசி வந்த சமூக வலைத்தள டிராக்கர்கள் இப்போது அஜித்தின் சம்பளம் பற்றி தகவல்களைப் பரப்பி வருவதாக கோலிவுட்டில் எரிச்சலடைகிறார்கள்.