இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓ சொல்றியா மாமா என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலில் சமந்தா நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இதன் காரணமாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஐட்டம் பாடல் ஒன்று இடம் இருக்கிறது. அதில் மீண்டும் சமந்தாவை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் காரணமாக தற்போது அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சென்றுள்ளது. அவர் ஓகே சொல்லிவிட்டார்.
திஷா பதானி தான் புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய பாடலுக்கு முதலில் நடனமாட இருந்தவர். அவரது கால்ஷீட் பிரச்சனை காரணமாக பின்னர் இந்த பாடலில் நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.