வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் |

நடிகர் சரத்குமார் தற்போது போர்த்தொழில், பரம்பொருள் மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களுடன் மதிய உணவு சாப்பிட விரும்பிய சரத்குமார், ‛சரத்துடன் மதிய உணவு' என்ற பெயரில் நடத்திட திட்டமிட்டுள்ளார். ரசிகர்கள், நலம் விரும்பிகளுடன் உணவருந்தி, உரையாட காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் விபரங்களை மெயில் அனுப்ப வேண்டும் என்றும், அதில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் உரையாடலுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பான விபரங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு: என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுகூறும் போது, வீடுகளுக்கு பத்திரிகை போடும் இளைஞனாக, சிறு பணியில் துவங்கிய பயணம், எத்தனை எத்தனையோ போராட்டங்கள், வேதனைகள், வலிகளுடன் இன்று நான் இருக்கும் உயரத்திற்கு அழைத்து வந்துள்ளது. இந்த இடத்தை அடைய எத்தனை நீண்ட தூரம் பயணித்துள்ளேன் என திரும்பி பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.
இத்தருணத்தில் என்னை விமர்சித்து, ஊக்குவித்து, ஆதரித்து ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கை பயணத்தில் பொதுவாக பலரை சந்தித்திருக்கிறேன். என்னை சந்திக்க விரும்பிய பலரை சூழல் காரணமாக சந்திக்க இயலாமல் இருந்திருக்கிறேன். தற்போது, தூரத்தில் இருந்து என்னை கண்டவர்களை, அருகில் கண்டு உபசரிக்க ஓர் வாய்ப்பாக "சரத்துடன் மதிய உணவு" திட்டமிட்டுள்ளேன். உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்! வாருங்கள், சந்திப்போம்!!. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.