பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தி குதிரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குதிரையுடன் இருப்பது எனக்கு எப்போதும் உற்சாதத்தை ஏற்படுத்தும். காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பின்போது குதிரை ஏறுவதை கற்று கொண்டேன். அதன்பிறகு நான் நினைத்ததை எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தின்போது செய்தேன். அதனால் கிடைத்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.