சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
பீஸ்ட் படத்தை அடுத்து விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். குடும்ப சென்டிமென்ட் உடன் காமெடி கலந்த படமாக தயாராகிறது. இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வந்தன. பிறகு ஹிந்தி நடிகை கீர்த்தி சனோன் உள்ளிட்டோரது பெயர்கள் அடிப்பட்டன.
இந்நிலையில் விஜய் 66 படத்தின் நாயகியாக ராஷ்மிகா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் முதன்முறையாக விஜய் உடன் ஜோடி சேருகிறார் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் வேறு படங்களில் நடிக்காத அவர் இப்போது விஜய்யின் படத்தை கைப்பற்றி உள்ளார்.