இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பீஸ்ட்' படம் அடுத்தவாரம் ஏப்.,13ம் தேதி திரைக்கு வர உள்ளது. நேற்று விஜய்யின் அடுத்த படமான விஜய் 66 பூஜையுடன் துவங்கி உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களிலும், சுவரொட்டிகளிலும் இழிவாக பேசி மீம்ஸ், போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றன. இதுபற்றி விஜய்யின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ‛‛அரசுப்பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை, யாரையும் எக்காலத்திலும் இழிவு படுத்தும் வகையில் பத்திரிக்கை, இணையதளங்களில் போஸ்டர்களின் என எந்தத்தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.
விஜய்யின் உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதனை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயக்கத்தை விட்டும் நீக்கியுள்ளோம். இருப்பினும் இதை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.