23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட உதயநிதி சமீபகாலமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வாங்கி வெளியிட்டு வருகிறார். அண்ணாத்த, எப்ஐஆர், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், காத்துவாக்குல ரெண்டு காதல், பீஸ்ட், விக்ரம் படங்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தையும் வாங்கி உள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற மே 13 அன்று வெளியாகிறது. இந்த நிலையில் டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.