சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அதற்குப் பின் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்திலேயே அவருடைய நடிப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும் தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான 'மாறன்' படம் மிகவும் மோசமான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. அப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் நடிப்பைப் பற்றியும் பலரும் நெகட்டிவ்வாக விமர்சித்திருந்தார்கள். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பவர் மாளவிகா மோகனன். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிக லைக்குகளை வாங்குபவர்.
'மாறன்' தோல்விக்குப் பிறகு இன்ஸ்டாவில் தன்னுடைய அப்டேட்களையும், அப்லோடுகளையும் குறைத்துக் கொண்டார். இப்போது மீண்டும் களத்தில் குதித்துவிட்டார். கடந்த சில நாட்களாக விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அடுத்த படமாவது மாளவிகாவுக்கு நல்ல படமாகக் கிடைக்குமா என அவருடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.