2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் இரண்டு பெரிய படங்கள் மோத உள்ளன. ஒன்று விஜய் நடித்த 'பீஸ்ட்', மற்றொன்று யஷ் நடித்த 'கேஜிஎப் 2'. இரண்டு படங்களுக்கும் போட்டி இல்லை, இரண்டையும் ரசியுங்கள் என இரண்டு படக்குழுவினரும் கேட்டுக் கொண்டாலும் தமிழகத்தில் நடக்கும் போட்டி ஆச்சரியமளிப்பதாக உள்ளது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்திற்கு முன்பதிவில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறதோ அளதே அளவுக்கு யஷ்ஷின் 'கேஜிஎப் 2' படத்திற்கும் வரவேற்பு இருக்கிறதாம். கன்னடத்திலிருந்து வரும் ஒரு டப்பிங் படத்திற்கு இங்கு முன்னணியில் உள்ள ஒரு ஹீரோவின் படத்திற்குக் கிடைக்கும் அளவு வரவேற்பு இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
'பீஸ்ட்' படத்தோடு வேறு எந்த ஒரு தமிழ் நடிகரின் படம் வந்திருந்தால் கூட தடுமாறிப் போயிருக்கும். ஆனால், விஜய் படத்தை சமாளிக்கும் அளவிற்கு யஷ் படம் இருப்பது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளதாம்.
படம் வெளிவந்த பின் 'பீஸ்ட்' படத்திற்கான விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இருந்தால் மட்டுமே அவர்கள் 'கேஜிஎப் 2' போட்டியை சமாளிக்க முடியும் என்கிறார்கள்.