இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கிறிஸ் ராக். இதனால் கோபமான வில் ஸ்மித், விழா மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித்.
இருப்பினும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் வந்தபோது ஆஸ்கர் கமிட்டியில் தான் வகித்த பொறுப்பை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இந்நிலையில் இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் குழு நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி குழுவினர் அறிவித்துள்ளனர்.