வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் |
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா. 8 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். பைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிகர்தண்டா படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்த நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போகிறாராம். பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.