மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் நாளை மறுதினம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் அமெரிக்காவில் தமிழ், தெலுங்கில் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழில் 350 தியேட்டர்களிலும், தெலுங்கில் 186 தியேட்டர்களிலும் படத்தை வெளியிடுகிறார்கள். நாளை பிரிமீயர் காட்சிகளும் நடைபெற உள்ளன. இரண்டுக்குமான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுவரையிலும் 4,10,000 யுஎஸ் டாலர் தொகை முன்பதிவு மூலம் கிடைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 3,07,50,000 ரூபாய். 'கேஜிஎப் 2' படம் 'பீஸ்ட்' தியேட்டர்களை விடவும் அதிக எண்ணிக்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இருப்பினும் 'கேஜிஎப் 2' படத்திற்கு முன்பதிவு மூலம் 4,08,000 யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 3,06,00,000 ரூபாய் கிடைத்துள்ளது.
இரண்டு படங்களுக்குமான முன்பதிவு விறுவிறுப்பாக இருந்தாலும் குறைவான தியேட்டர்களில் வெளியாகும் 'பீஸ்ட்' அதிக வசூலைப் பெறுவது குறிப்பிட வேண்டிய ஒன்று.