தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

தமிழ் சினிமாவைப் போல தெலுங்கு சினிமாவில் அவ்வளவு சீக்கிரத்தில் யு டியுபில் சாதனைகளைப் படைக்க முடியாது. தமிழை விடவும் தெலுங்குப் படங்களின் டிரைலர்கள், டீசர்கள் குறைந்த அளவிலான சாதனைகளையே படைக்கின்றன.
சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆச்சார்யா' படத்தின் டிரைலர் நேற்று யு டியூபில் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாக 21.86 மில்லியன் பார்வைகளைப் பெற்று தெலுங்குத் திரையுலகத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்த டிரைலர். இந்த சாதனை மூலம் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' சாதனையை முறியடித்துள்ளது.
இதுவரை வெளிவந்துள்ள தெலுங்குப் படங்களில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வெளிவந்த 'ராதேஷ்யாம்' டிரைலர் 24 மணி நேரத்தில் 23.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 'பாகுபலி 2' டிரைலர் 21.81 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாவது இடத்திலும், 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் 20.45 மில்லியன் பார்வைகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ஐந்தாவது இடத்தை நாளை வெளியாக உள்ள 'கேஜிஎப் 2' டிரைலர் 19.38 பார்வைகளுடன் பிடித்துள்ளது.
சிரஞ்சீவி, ராம்சரண் டிரைலர் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றிருப்பது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.