தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் ருத்ரன், திருச்சிற்றம்பலம், யானை, பொம்மை என பல படங்கள் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். அதோடு தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் ஒரு வெப் தொடரிலும் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் அவர் கலந்துரையாடினார். பள்ளி காலத்தில் தான் விரும்பி சாப்பிட்டது. வெற்றிமாறன் படத்தில் நடிக்க விருப்பம், தனுஷை பார்த்து வியந்தது என ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஒரு ஏடா கூட ரசிகர், உங்களது உள்ளாடையின் சைஸ் என்ன? என்று பிரியாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், ‛‛நான் 34டி சகோதரரே. மார்பகங்களை நான் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையிலும் உள்ள பெண்களுக்கும் மார்பகங்கள் உள்ளது. உங்கள் பார்வையை நீங்கள் அங்கு உற்று நோக்கி பார்த்தாலும் தெரியும், வாழ்த்துக்கள்'' என பதிலடி கொடுத்துள்ளார்.