‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள். இந்தப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, தங்கராசு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இவர்களில் தங்கராசு என்பவர் அப்பட நாயகன் கதிரின் தந்தையாக நடித்தார். நாட்டுப்புற கலைஞராக இவர் நடித்து இருந்த வேடம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அதோடு கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாகவும் அமைந்தது.
இந்நிலையில் தங்கராசுவின் வறுமையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. அந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.