பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனரான தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'. காவலர் பயிற்சி பள்ளியைக் மையமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார். தற்போது நடிகர் சூரி டாணாக்காரன் படத்தை பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமையில்ல ஆனா போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு. பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறந்த படைப்பு" என்று தெரிவித்துள்ளார்.