ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரது நடிப்பில் உருவான 'பீஸ்ட்' படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஆனால் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இப்படம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதற்குக் காரணம் பிரம்மாண்டமான 'கேஜிஎப் 2' படம். 'பீஸ்ட்' படத்தை பல மடங்கு பிரம்மாண்டமாக இருந்ததால் 'கேஜிஎப் 2' படம் பற்றித்தான் ரசிகர்கள் அதிகமாகப் பேசுகின்றனர். அது படத்தின் வசூலிலும் எதிரொலித்துவிட்டது.
தெலுங்கில் 'பீஸ்ட்' ஐ விட அதிகமான தியேட்டர்களில் வெளியான 'கேஜிஎப் 2' படம் அங்கு 65 கோடி வசூலைக் குவித்துள்ளது. அதே சமயம் 'பீஸ்ட்' படம் அதில் பத்தில் ஒரு பகுதியாக 6.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
'பீஸ்ட்' படத்தின் தெலுங்கு உரிமை சுமார் 10.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படம் லாபத்தைப் பெற வேண்டுமானால் இன்னும் இரு மடங்கிற்கும் மேல் வசூலித்தாக வேண்டுமாம். அது நடக்க வாய்ப்பில்லை என்றே டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.