5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பிரதமர் மோடி குறித்து இளையராஜா வெளியிட்ட கருத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது. அதையடுத்து இளையராஜாவை ராஜ்யசபா எம்பி ஆக்கப் போவதாகவும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும் போராடவும் வாதங்கள் புரிவதற்கும் வேறு எதுவுமே இங்கே இல்லையா? மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ,தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதேபோல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?'' என்றொரு கேள்வியை தங்கர்பச்சான் எழுப்பி உள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.