ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாமனிதன்'. யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து அப்பா இளையராஜாவுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை சம்பந்தப்பட்ட சில பணிகள், ஏஆர் ரஹ்மானுக்குச் சொந்தமான ஏஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவலை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டு ஸ்டுடியோவின் இஞ்சினியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள படத்தின் இசைப் பணி ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் நடந்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். இளையராஜாவுக்குச் சொந்தமாக ஒரு ஸ்டுடியோ இருந்தாலும் அங்கு பாடல் பதிவு பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. ரஹ்மான் ஸ்டுடியோவில் 'மாமனிதன்' படத்தின் டால்பி அட்மாஸ் ஒலிக்கலவைப் பணி நடைபெற்றுள்ளது.
இந்தப் படம் ஜுன் மாதம் 24ம் தேதி வெளியாக உள்ளது. முதலில் மே 20ம் தேதி படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டிருந்து, தற்போது தள்ளி வைத்துவிட்டார்கள்.