ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் வெற்றி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜீவி'. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. விஜே கோபிநாத் இயக்கி வருகிறார். அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரண், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு, சூரி, கவுதம் மேனன், நிவின் பாலி, ஐஸ்வர்யா ராஜேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் ஜீவி 2 படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நடிகர் வெற்றி, லூசிபர் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார்.