கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
விஜய் டிவியில் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கோபிநாத் மீடியாவிலும் சரி, பொதுவாழ்விலும் சரி சமூகத்திற்கான சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் துப்புரவு தொழிலாளர்களில் கஷ்டங்களையும் அதையும் மீறிய அவர்களது மகத்தான சேவை குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் ஒரு செயலை செய்துள்ளார்.
கோபிநாத் துப்புரவு தொழிலில் ஈடுபடும் ஒருவரை சந்தித்து அவரின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொண்டு ஒருநாள் அவர்கள் செய்யும் வேலையை அவர்களுடன் சேர்ந்து செய்தும், அவர்கள் உபயோகப்படுத்தும் வாகனத்தை பயன்படுத்தியும் ஒரு துப்புரவு தொழிலாளியாகவே மாறியுள்ளார். அதன் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள அவர், “ஒரு நாள் வேலையே இவ்வளவு களைப்பாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு துப்புரவு தொழிலாளர்களும் ஒவ்வொரு நாளும் நமக்காக நமது சுற்றுப்புறத்தை தூய்மை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுங்கள்” என்று கூறியுள்ளார். கோபிநாத்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பலரும் அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர்.