தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. அதற்கான ஒத்திகையும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. 2024ல் தொடங்கப் போகும் அந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளதாம். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கதை களத்தில் உருவாகப் போவதாக தகவல்.