தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பெரம்பலுார் : 'டிவி' சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, 29; தனியார் 'டிவி' சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிச., 9ல் செம்பரம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சித்ராவின் கணவரை கைது செய்தனர்.
கடந்த 2021 மார்ச் 3ல், ஜாமினில் அவர் வெளியில் வந்தார். நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்ளிட்ட பலரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர். சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.
![]() |