பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதிஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் ஹிந்தியில் மற்ற மொழிகளைக் காட்டிலும் வசூலில் முன்னணியில் உள்ளது. தற்போது 370 கோடி வசூலை ஹிந்தியில் கடந்துள்ள இந்தப் படம் இந்த வார இறுதிக்குள்ளாக 400 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் ஹிந்தியில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 510 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் 'பாகுபலி 2' படம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் 387 கோடிகளுடன் 'டங்கல்' படம் உள்ளது. அடுத்த சில நாட்களில் 'டங்கல்' வசூலை முறியடித்து 'கேஜிஎப் 2' படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிடும். இந்திய அளவில் டாப் 2 இடங்களை தெலுங்கு, கன்னடப் படங்கள் பிடித்து ஹிந்திப் படங்களை பின்னுக்குத் தள்ளுவது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
'கேஜிஎப் 2' படம் தமிழகத்திலும் இந்த வாரத்திற்குள்ளாக 100 கோடி வசூலைக் கடந்து விடும் என அதிகாரப்பூர்வத் தகவலும் தெரிவிக்கிறது.