நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ் சினிமா என்றுதான் பெயர், ஆனால், இங்கு எப்போதுமே வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள்தான் நம்பர் 1 இடத்தில் இருபபார்கள். இப்போது கூட சம்பளத்திலும் சரி, பிரபலத்திலும் சரி கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாராதான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
இருந்தாலும் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இன்று தன்னுடைய 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில காலம் நம்பர் 1 நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'லேசா லேசா' படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டாலும், த்ரிஷா நடித்து முதலில் வெளிவந்த படம் 'மௌனம் பேசியதே'. அதற்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முக்கியமான முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விக்ரமுடன் நடித்த 'சாமி' படம்தான் அவருக்குப் பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் விஜய்யுடன் நடித்த 'கில்லி' அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த 'அபியும் நானும்' படமும் அவருடைய நடிப்பைப் பற்றிப் பேச வைத்தது.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'ராங்கி' படம் வெளிவர வேண்டும். 'சதுரங்க வேட்டை, கர்ஜனை' உள்ளிட்ட படங்களும் வெளியாக வேண்டும்.
20 வருடங்களாக அனைத்து போட்டிகளையும் சமாளித்து திரையுலகில் வெற்றிநடை போடுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 40 வயதைத் தொட்டாலும் இப்போதும் 20 வயதைப் போலவே இருக்கிறார் த்ரிஷா.