நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில், டாக்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சூரி. கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
கிட்டத்தட்ட முப்பது வயதைத் தாண்டிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் பொருந்தக் கூடியதுதான் என்றாலும் அதை இன்னும் நம்பும் வகையில் 17 வயது இளைஞனாக அவரை இந்த படத்தில் காட்டி உள்ளார்களாம். இதற்கு முன் ஆதவன் படத்தில் சூர்யா, கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஆகியோரின் பள்ளிக்கால தோற்றத்திற்கு அவர்கள் உருவத்தை மாற்றியது போல இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் அதேபோன்று இளமை தோற்றத்தில் கல்லூரி காட்சிகளில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.