‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' | 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் |

கோயம்புத்தூரை சேர்ந்த மாடல் அழகி சம்யுக்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றார். சில மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் சந்திரகுமாரி தொடரில் நடித்தார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள வெப் தொடர் குத்துக்கு பத்து. 'டெம்பிள் மங்கீஸ்' என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் தொடர் இது. விஜய் வரதராஜ் இயக்கி உள்ள இந்த தொடரில் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். டி கம்பெனி சார்பில் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.
தொடர் குறித்து அதன் இயக்குனர் விஜய் வரதராஜ் கூறியதாவது: காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. என்றார்.
இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் குத்துக்கு பத்து, நோ பேச்சு, ஒன்லி பஞ்ச் என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த தொடர் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.