போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் தமிழ் நடிகர்களான சரத்குமார், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், ஜெயசுதாவும் நடிக்கின்றனர். நேற்று இப்படத்தில் நடிக்கும் மற்ற சில நடிகர்களைப் பற்றிய அப்டேட்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்தது படக்குழு.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக நேற்று அறிவித்தனர். நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் தமிழ் நடிகர் ஷாம் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குடும்பக் கதையாக உருவாகிறது. படத்தைத் தமிழில் தயாரித்தாலும் எப்படியும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். எனவே, இரு மொழிகளிலும் அறிந்த நடிகர்கள், நடிகைகளை படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.