திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
கமல்ஹாசன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் டிரைலர்களில் 'விஸ்வரூபம் 2' டிரைலர்தான் அதிகபட்சமாக 82 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதை இப்போது 'விக்ரம்' டிரைலர் கடந்துவிட்டது. இளம் தலைமுறை இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோருடன் இணைந்த காரணத்தால் தான் கமல்ஹாசனுக்கு இந்த புதிய சாதனையை படைக்க முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்கு முன்பாக வெளிவந்த 'விக்ரம்' தலைப்பு அறிவிப்பு டீசர் 3 கோடி பார்வைகளையும், 'விக்ரம்' முதல் பார்வை டீசர் 1 கோடியே 80 லட்சம் பார்வைகளையும், 'விக்ரம்' முதல் சிங்கிள் 'பத்தல பத்தல' 2 கோடியே 30 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளதை வைத்தும் அந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.
'விக்ரம்' டிரைலரைப் பார்த்த பின்பு படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. இப்படம் இந்திய அளவில் வரவேற்பைப் பெறும் ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ந்து வருகிறார்கள்.