ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் |
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ,சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் வெளியாகின. தற்போது 'நட்சத்திரம் நகருகிறது' என்ற படத்தை இயக்கியுள்ளார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கமலின் 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனை வைத்து மதுரை பின்னணியில் ஒரு படம் இயக்க எனக்கு ஆசையாக உள்ளது என்றார். மேலும் மதுரை என்றால் வேஷ்டி, சட்டை என்றில்லாமல் கோர்ட் ஷுட்டுடனும் வரலாம் எனதெரிவித்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானது .