நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் |
தமிழில் முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டபோது, அங்கு பூஜாவின் ரசிகர்-ரசிகைகள் கையில் பேனர் ஏந்தியபடி அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பூஜா ஹெக்டே, தன்னை வாழ்த்திய ரசிகர்களை அருகில் சென்று சந்தித்து விட்டு அதன்பிறகு விமான நிலையத்திற்குள் சென்றார். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது.