துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த சந்திரமுகி படம் 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படம் மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மணிசித்திரதாழ் படத்தின் ரீமேக் ஆகும். இந்த நிலையில் அதே பி.வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனபோதிலும் படப்பிடிப்பு தொடக்க படவில்லை. அதனால் வேறு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் தற்போது சந்திரமுகி படத்தை தயாரிப்பதாக இருந்த நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும் இப்போது அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து பி.வாசு ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.