'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகிவிட்டார் கன்னட நடிகரான யஷ். நாடக நடிகர், டிவி நடிகர், சினிமா நடிகர் என அவரது பயணம் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து உயர்ந்து இப்போது பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்திற்கும் ஒப்பந்தமாகிவிட்டார். ஆனால், 'கேஜிஎப்' படத்திற்காக எட்டு ஆண்டுகள் வரை உழைத்த யஷ் தனது அடுத்த படம் பற்றிய எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.
'கேஜிஎப் 2' படத்தின் 50வது நாளில் அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கன்னடத்தில் 'முப்டி' என்ற படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் யஷ் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'முப்டி' படம்தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க தமிழில் 'பத்து தல' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. முதலில் இப்படத்தை இயக்க ஆரம்பித்த நார்தன் பின்னர் விலகிவிட்டார்.
'கேஜிஎப் 3' படம் உருவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பிரசாந்த் நீல் 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' படங்களை முடித்த பிறகே 'கேஜிஎப் 3' படத்திற்கு வர முடியும். எனவே, யஷ் அடுத்து ஒரு பான்--இந்தியா படத்தில் நடிக்காமல், ஒரு கன்னடப் படத்தில்தான் நடிப்பார் என உறுதியாகக் கூறுகிறார்கள்.