‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மார்க் கிரீனியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'தி கிரேமேன்'. அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸ்ஸோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தில் ரையன் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
இந்த படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படம் பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டிரைலரையும் வெளியிட்டுள்ளனர். ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி உள்ளது. அதிரடி ஆக் ஷன் காட்சிகளாக டிரைலர் அமைந்துள்ளது. டிரைலரில் தனுஷ் சில விநாடிகள் மட்டும் தான் வருகிறார். இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.