பிரேம்குமார் - பஹத் பாசில் பட தலைப்பு ‛அசரீரி' : ஜன., 1ல் படம் ரிலீஸ் | ஜேம்ஸ் பாண்ட் : 60 ஆண்டுகளைக் கடந்த உளவாளியின் முழு வரலாறு! - சீன் கானரி முதல் ராபர்ட் பேட்டின்சன் வரை...!! | சினிமா என்பது மனித உணர்வுகளையும் அனுபவங்களையும் ஆராய்வது : ஆயுஷ்மான் குரானா | ஐதராபாத், தெலுங்கு சினிமாவை விட்டு விலகுகிறாரா அனுஷ்கா? | பிரபுதேவா- விஷ்ணு மஞ்சு இணையும் புதிய படம் | ராமாயணா படத்திற்காக 10 முதல் 12 படங்களை தவறவிட்டேன் : ஏ.ஆர்.ரஹ்மான் | வன்முறையை விட பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுங்கள் : உலக அமைதி விருதுகள் விழாவில் ஷாருக்கான் பேச்சு | மணிப்பூர் பெண்ணாக நடிக்கும் பவானிஸ்ரீ | கீர்த்தி சுரேசுக்கு நன்றி தெரிவித்த பிரிகிடா | கடந்த வாரம் வந்த படங்களின் வரவேற்பு எப்படி |

மைனா, கும்கி, கயல், தொடரி, காடன் ஆகிய படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். தற்போது அவர் கோவை சரளாவை முதன்மை கதாபாத்திரமாக வைத்து செம்பி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை காமெடி ரோல்களில் நடித்து வந்துள்ள கோவை சரளா, இந்த படத்தில் முதன்முறையாக ஒரு சீரியஸான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் தம்பி ராமையா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த செம்பி படத்தின் டிரைலரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரை பார்க்கும் போது மலைவாழ் மக்களையும், ஒரு பேருந்தையும் மையப்படுத்திய கதையில் உருவாக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதோடு பேருந்து விபத்து நடப்பது, காவல்துறை நடவடிக்கையில் இறங்குவது உள்ளிட்ட சில காட்சிகளை பார்க்கும்போது இப்படம் மைனா படத்தின் சாயலை வெளிப்படுத்துகிறது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.




