மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
புதுமுகங்கள் இணைந்து அரசியல் படமொன்றை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் தலைப்பு பூதமங்கலம் போஸ்ட். விஜய் கோவிந்தசாமி, ராஜன் மலைச்சாமி, அஸ்மிதா, மோனிகா ரெட்டி, ராட்சசன் பசுபதி, மாஸ்டர் தக்சித் தேவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். சி.சி.வி.குரூப்ஸ் சார்பில், பொன் கோ. சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன் கோ விஜயன் தயாரித்திருக்கிறார்கள். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், அர்ஜூன், கவி இசை அமைத்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ராஜன் மலைச்சாமி கூறியதாவது: கிராமத்தில் இரு நண்பர்களும் உயிருக்கு உயிராய் பழகி வந்தனர். இவர்களின் நட்பை ஊரே வியந்து பார்த்தது. இந்த நட்புக்குள் விதி புகுந்தது அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக்கொண்டனர். இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் படம்.சென்னை, தண்டலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் படமாகியுள்ளது. என்கிறார் இயக்குனர்.