'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவில் இந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய திருமணமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அமைந்தது. சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அவர்களது திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சில பல வருடங்களாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்தை முன்னிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் பல கோடி மதிப்புள்ள பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசளித்துள்ளாராம். அது போல நயன்தாரா திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவனுக்காக 20 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை வாங்கி, அதை திருமணப் பரிசாகக் கொடுத்தாராம். இப்படி நேற்று முதலே செய்தி சுற்றிக் கொண்டிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் 'நானும் ரௌடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அவரது முதல் படமான 'போடா போடி' ஓடவில்லை. சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவிய படமாக அமைந்தது. அதற்குள் விக்னேஷ் சிவன் 10 கோடி வரை சம்பாதித்து தனது மனைவி நயன்தாராவிற்கு பரிசளித்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
நயன்தாரா புதிதாக 20 கோடியில் வீடு வாங்கினார் என்பதை வேண்டுமானால் நம்பலாம் என்கிறார்கள். இந்த புது வீட்டிற்கு புதுமணத் தம்பதியினர் விரைவில் குடியேறுவார்கள் எனத் தெரிகிறது.