சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் நடித்த 'விக்ரம்' படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கில் கூட இப்படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெரிதும் ஈர்க்கப்பட்டு, கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரை அழைத்து தன் வீட்டில் விருந்து கொடுத்து கவுரவித்துள்ளார். அது பற்றிய விவரத்தை சிரஞ்சீவி காலை வெளியிட்டிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் கூறுகையில், “நன்றி சிரஞ்சீவி காரு. கே பாலசந்தரிடம் நாம் இருவரும் ஒன்றாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நமது பரஸ்பர நண்பரான சல்மான் பாயுடன் உரையாடியதும் மகிழ்ச்சி. சிறந்த மாலையாக அமைந்தது. எங்களை கவனித்துக் கொண்ட உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ”சிறப்பான மாலையாக அமைந்தது. எங்களை அழைத்ததற்கு நன்றி. சல்மான் சாரை சந்தித்ததும் சிறந்த மகிழ்ச்சி. கமல் சாருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.