இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
2022ம் ஆண்டு பட வெளியிட்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி தினமும் ஒரு முக்கியமான தினமாகும். இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முத்தையா இயக்கத்தில், கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்கும் 'விருமன்' மற்றும் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா நடிக்கும் 'பிரின்ஸ்' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 'பிரின்ஸ்' பட வெளியீட்டுத் தேதியை தீபாவளிக்கு மாற்றலாமா என யோசித்து வருகிறார்களாம். இந்த வருட தீபாவளிக்கு அஜித் நடிக்கும் 61வது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் ஆரம்பமாகி உள்ளதால் தீபாவளிக்கு படம் வெளிவர வாய்ப்பில்லை. எனவே, 'பிரின்ஸ்' படத்தை தீபாவளி நாளில் வெளியிட்டால் கொண்டாட்டமாக இருக்கும் என படக்குழு கருதுகிறதாம்.
தீபாவளி நாளில்தான் கார்த்தி நடிக்கும் மற்றொரு படமான 'சர்தார்' படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். எனவே, 'விருமன்'ஐ விட்டுவிட்டு 'சர்தார்' உடன் மோதலாம் என 'பிரின்ஸ்' நினைக்கிறாராம். 'டாக்டர், டான்' என அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுகள் கொடுத்துள்ளதால் சிவகார்த்திகேயன் படம் என்பதால் 'பிரின்ஸ்' படத்திற்கு தீபாவளிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம்.