துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாலிவுட்டிலும், ஹாலிவுட்டைப் போல 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதாவது பிரபலங்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறிய நிமிடம் முதல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரை அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பவர்களை 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் என்றழைப்பார்கள்.
இப்படியான பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் துரத்தியதால் தான் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசி டயானா விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்று சொல்வார்கள்.
பாலிவுட்டில் இப்போதும் நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் வந்து ஷாப்பிங் சென்றால், ஜிம்முக்குச் சென்றால், படப்பிடிப்புக்குச் சென்றால், நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அவர்கள் பின்னால் சென்று பல பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் போட்டி போட்டு படமெடுப்பார்கள். அவர்களுக்காக நடிகைகளும் சில நிமிடங்கள் ஒதுக்கி போஸ் கொடுப்பார்கள்.
அப்படி சில கலைஞர்கள் நடிகை ராஷ்மிகாவை புகைப்படம் எடுத்த போது, “இந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்,” என அப்பாவியாக சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார். அந்தப் புகைப்படங்கள் பல இணையதளங்களில் வெளிவருவதை ராஷ்மிகா இதுவரை பார்த்திருக்க மாட்டாரோ ?.