துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிவா இயக்கத்தில் ‛அண்ணாத்த' படத்தில் நடித்த ரஜினி அதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படத்தில் வலுவான திரைக்கதையை அமைக்காததால், இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு தனது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நியமித்திருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ் .ரவிக்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் இறுதியிலிருந்து ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. அதோடு இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாக இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளிடமும் மூன்று மாதத்திற்கு மொத்தமாக கால்சீட் வாங்கி உள்ளனர்.