பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

ரக்ஷிதா பிலிம் பேக்டரி சார்பில் ரக் ஷிதா பிரேம் தயாரித்துள்ள படம் ஏக் லவ் யா. பிரேம்.எஸ் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார். இவர்களுடன் சரன்ராஜ், ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேன் சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரேம் கூறியதாவது: ஹீரோவின் முன்னாள் காதலி சில மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே இந்த கற்பழிப்புக்கு ஹீரோ தான் காரணம் என்று கூறி அவர் மீது பழி போடுகிறார்கள். நிரபராதியன ஹீரோ தன் மீது விழுந்த பழியை துடைப்பதோடு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர மிகப்பெரிய வக்கீலை எதிர்த்து போராடுகிறார்.
இத்தகைய போராட்டத்தில் ஹீரோ எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதோடு, இளைஞர்கள் காதலில் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும், உண்மையான காதல் பற்றியும் அழுத்தமாக சொல்லி காதலர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
கன்னடத்தில் வெளியான இந்த படம் தற்போது தமிழில் வெளிவருகிறது. ஜூலை 1ம் தேதி மலையாளத்தில் வெளிவருகிறது. என்றார்.