பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பிரின்ஸ்'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் சில காரணங்களால் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.