மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? |
பாலிவுட்டின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பதான்'. மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
ஷாருக்கான் நடிகராக அறிமுகமாகி நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் முதன் முதலில் நடித்த ஹிந்திப் படமான 'தீவானா' வெளிவந்து நேற்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஷாருக்கின் 30 ஆண்டு கால சினிமாவைக் கொண்டாடும் வகையில் நேற்று 'பதான்' படத்தின் போஸ்டரை யாஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டது.
ஹிந்தியில் தயாராகி வரும் இப்படத்தை தெலுங்கு, தமிழிலும் வெளியிட உள்ளனர். தமிழ் போஸ்டர் தப்பும் தவறுமாய் வெளியிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் என்பதை 'ஷாருக்கான' எனவும், இயக்கம் என்பதை 'இகை்கம்' எனவும் தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். நன்றாகத் தமிழ் தெரிந்த ஒருவரிடம் இது குறித்த வேலையைக் கொடுத்திருக்கலாம்.
தனது 30 வருட திரையுலகப் பயணத்திற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்கான். 'பதான்' படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.